அநுரவை வீழ்த்த மகிந்தவின் 'மாஸ்டர் பிளான்': திரைமறைவில் நடக்கும் புதிய சூழ்ச்சி
மோசடி விவகாரங்களைப் பயன்படுத்தி தற்போதைய தேசிய மக்கள் அரசாங்கத்தை வீழ்த்தி தாம் ஆட்சிக்கு வருவதற்கு மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம் வகுப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரச பணத்தைக் கையாளுதல், முறையற்ற விதத்திலே பயன்படுத்துதல், அரச பணத்தை சொந்தக்காரர்களுக்கு கொடுத்தல் இவ்வாறு பல்வேறு பட்ட நடவடிக்கைகளிலே ஈடுபட்ட அரசாங்கம் தான் கடந்த காலங்களிலே பதவியில் இருந்தது.
குறிப்பாக அதனுடைய தலைவர் மகிந்த ராஜபக்ச.தற்போது அவர் தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தை பற்றி விமர்சிப்பது மக்கள் மீதான நம்பிக்கையினாலோ அரச பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படவில்லை என்ற கரிசனையினாலோ அல்ல.
தற்போதைய அரசாங்கத்தை வெளியேற்றி விட்டு தமது ஆட்சியை மீண்டும் நிலைநாட்டி ஊழல்களை செய்வதற்கு ஏற்பாடு செய்கின்றனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் தேசியமக்கள் சக்தி அரசாங்கம் கவனத்துடன் இருக்க வேண்டும்.அத்தோடு, பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,