மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது (Photos)
மட்டக்களப்பு திஸ்ஸவீரசிங்கம் சதுக்கத்தில் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இனைஞனை இன்று (28.12.2023) மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் 01ஆம் குறுக்கு வீதியில் வீடு ஒன்றினை இளைஞர் ஒருவர் வாடகைக்குப்பெற்று வசித்து வந்த நிலையில் அவரின் செயற்பாடுகளை அப்பகுதி இளைஞர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.
தேடுதல் நடவடிக்கைகள்
இந்நிலையில் குறித்த வீட்டினை இன்று மாலை இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன் இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து அங்குவந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எம்.விவேகானந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு அதிக பெறுமதிகள் உடைய மோட்டார் சைக்கிள்களும் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது அங்கு போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அங்கிருந்த இரண்டு பெண்களும் விசாரணைக்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
