முல்லைத்தீவில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவர் கைது
முல்லைத்தீவு(Mullaitivu) கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட கொக்கிளாய் பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இருந்து கொக்குளாய் பகுதிக்கு சென்ற குறித்த படகினை கண்ட முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் மறித்து கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்கள்.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது அந்த படகில் சுமார் 700 கிலோ வரையான சூடை மீன்கள் காணப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமான முறையில் இந்த மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் அத்துடன் ஒளிபாச்சிகள்(லைட்),பற்றிகள்,என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சான்றுப்பொருட்களையும் குறித்த சந்தேக நபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |