முல்லைத்தீவில் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
முல்லைத்தீவு-முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்துள்ளார்.
கடந்த 14.10.2025 அன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக உள்ள முதன்மை வீதியில் மிதிவண்டியில் பயணித்த வயோதிபர் ஒருவர் பின்னால் வரும் வாகனத்தினை பார்க்காமல் பயணிகள் நடை கடவை வெள்ளைக்கோட்டினால் மிதிவண்டியினை திருப்ப முற்பட்ட போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.
இவ்வாறு முள்ளியவளை 1 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த கந்தசாமி விசுவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனை மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(15) மாலை உயிரிழந்துள்ளார்.

வாகனத்தினை ஓட்டிச்சென்ற வாகனத்தின் சாரதி முள்ளியவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 17.10.2025 அன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam