முல்லைத்தீவு விபத்தொன்றில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (29.06.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நால்வர் உயிரிழப்பு
அத்துடன், கடந்த 25ஆம் திகதி நடந்த மாங்குளம் விபத்தினால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்து மீது வீதியில் பயணித்த பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்ட நாளில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் (ONUR) பணிப்பாளர் சபை பிரதிநிதியாக 48 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri