மன்னார் மடு வீதியில் விபத்து: ஒருவர் பலி
மன்னார் (Mannar) மடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் காயங்களுடன் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது, மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று (29.06.2024) அதிகாலை ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், மடு ஜோதிநகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் விபத்துக்குள்ளாகியதில் 35 வயதுடைய நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், இவர் மன்னார் பெரியகமம் பிரதேசத்தில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது.
அதேவேளை, காயமடைந்தவர் முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
