சட்டவிரோதமான ரீதியில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் கைது
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை முனைக்காடுப் பிரதேசத்தில் சட்டவிரோதமான ரீதியில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவரை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
இக்கைது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு இணங்க குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் புலனாய்வு குழுவினரினால் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், 48 டின்கள் மற்றும் 9 போத்தல்களுடன் இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்து பாவனைகள் மற்றும்
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்
மாசிங்க முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் கீழ் மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை
பிரிவு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
