யாழில் கடற்றொழிலுக்கு சென்ற 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் கடலில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(04.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த நபர் உட்பட மூவர் நேற்று முன்தினம்(03) இரவு 10.30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது அமலசூரி அன்ரனியூட் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவருடன் சென்றவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(04) அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
