மீள்குடியேற்ற நடவடிக்கைகள் 2025க்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்: ஜனாதிபதி ஆலோசனை
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் தற்போதுள்ள பிரச்சினைகளை தொடர முடியாது எனவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு
இந்நிலையில், அதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் யாழ். மாவட்ட விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஐவர் கைது
மேலும், இதன்போது அத்துமீறி உள்நுழைய முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஐவர் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர்களை விடுவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri