ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை வேஷ்டியாக அணிந்து சென்ற நபர்
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் கடந்த 9 ஆம் திகதி சென்றவர்களுடன் இருந்த ஒருவர், மாளிகையில் பறக்கவிடப்பட்டிருந்த ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற காட்சி அங்கிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தியோகபூர்வ கொடி
அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகலாம்..! சூடு பிடிக்கும் தென் இலங்கை அரசியல்
ஒரு நபர், ஜனாதிபதியின் கொடியை வேஷ்டியை போல் கட்டிக்கொண்டு செல்லும் விதம் பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடி ஜனாதிபதி மாளிகைக்கு வரும் விருந்தினர்களை சந்திக்கும் பிரதான மண்டபத்தில் தேசிய கொடியுடன் பறக்கவிடப்பட்டிருந்து.
பெறுமதியான பல பொருட்கள் கொள்ளை
இதனை தவிர மேலும் சிலர் ஜனாதிபதி மாளிகையில் இருந்த தொன்மை வாய்ந்த பெருந்தொகையான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
கொடி, புகைப்படங்கள், நினைவுப்பரிசுகள், கலைப்பொருட்கள், வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள், கொடியேற்றும் கம்பம் உட்பட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அதேவேளை புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ கொடியை தடை செய்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி