பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த பெண் கைது
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை சமூகவலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளம்பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு புறநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே கடந்த 2023 டிசம்பர் 28 அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் 7 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்
இதற்கமைய குறித்த பெண்ணின் கணவரும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் கடத்திய சம்பவத்தில் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதுடன் இப்பெண் மற்றுமொரு ஆணுடன் உறவினை தொடர்ந்து இப்போதைப்பொருள் வலையமைப்பினை நடாத்திவந்துள்ளார்.

இப்பெண்ணின் போதைப்பொருள் வலைப்பின்னலானது பாடசாலை மாணவர்களை அடிப்படையாக கொண்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக இடங்களை குறிப்பிட்டு ஐஸ் மற்றும் இதர போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளதாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையில் செயற்பட்டு வரும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டல்களை வழங்கவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri