மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கிய ஒருவர் பலி
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில் நேற்று மின்சாரம் தாக்கியதில் 41 வயதான வினாசித்தம்பி - தியாகராசா என்பவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் துறைநீலாவணை கிராமத்தினை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
35ஆம் கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டில் உள்ள மின்சாரத்தினை எடுத்து அயலில் உள்ள வீட்டுக்கு மின்சாரத்தினை வழங்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கியவரை உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொன்டு செல்லும் போது உயிழந்துள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam