அனுராதபுரத்தில் முதலை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு
அனுராதபுரம் (Anuradhapura) - கெமுனுபுர பிரதேசத்தில் முதலை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவைக் கடந்து சென்ற 60 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு முதலை தாக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், மொர ஓயாவுக்கு அருகில் ரஞ்சித் மங்கட என்கின்ற பகுதியில் மூன்று பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
பிரேத பரிசோதனை
இதன்போது, அவர்களில் ஒருவர் இறைச்சி எடுத்துக்கொண்டு வருதற்காக தனது வீட்டுக்குச் செல்ல மீண்டும் மொர ஓயாவைக் கடக்கும்போது முதலையால் தாக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஸ்ரீபுர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
