ஈபிடிபியின் வன்னி மாவட்ட வேட்பாளர் விபரம் வெளியானது
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) வன்னி மாவட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மை வேட்பாளர்
அந்தவகையில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கிறிஸ்தோபர் டினேஸ் றொசின்ரன், மதுர பிரபோத் ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன், வன்னித் தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தி அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ், வின்சன் டிபோல் அருள்நாதன், சின்னத்துரை கலாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஞானப்பிரகாசம் மரியசீலன், முருகேசு கதிர்காமநாதன், இந்திரகுமாரன் செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருமணம் முடிந்த பிறகு சோழனிடம் நிலா சொன்ன முக்கியமான விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri