நீதிமன்ற சிறைச்சாலை கூடத்தில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் தவறான துக்கில் தொங்கியவாறு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (05.10.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் வழக்கிற்கு கொண்டுவரப்பட்டு புத்தளம் நீதிமன்ற சிறைச்சாலைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
கப்புஹேன கனேமுல்ல பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சமிந்த திஸாநாயக்க என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.






10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
