யாழ். வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
வீதியில் நெல் உலர்த்துவதற்காக நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இன்று (11.2.2024) இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிக பனி மூட்டம்
கொடிகாமம் கச்சாய் - புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் வீதியில் இன்று காலை ஐந்து மணியளவில் நெல்லை உலர விடுவதற்காக பரவிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் அவர் மேல் மோதி விபத்துக்குள்ளானது.

பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
காலையில் அதிக பனி மூட்டம் இருள் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை, அதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திடீர் மரண விசாரணை
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 4 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri