யாழில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற நபர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (25.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ். முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய சந்திரசேகரம் மயூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த நபர் முச்சக்கர வண்டி சாரதியாக பணியாற்றி வந்த நிலையில்
நேற்று முன்தினம் (24) இரவு முச்சக்கர வண்டியில் செல்லும்போது குப்பிழானில்
விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் முச்சக்கர வண்டியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம்(25) அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள புளியமரத்தில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரது சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றைய தினம்(26) சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam
