பாடசாலை மாணவர்களிடம் அநாகரீகமாக செயற்பட்டவர் கைது
பாடசாலை மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் தவறான காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த (20) சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் ஜனக பண்டார தெரிவித்தார்.
வாக்குமூலம் பதிவு
பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சந்தேகநபர் தவறான காணொளிகளை காண்பித்ததாக நானுஓயா பகுதியில் உள்ள பல மாணவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாணவிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரை (21) இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மாணவிகளிடம் தடயவியல் மருத்துவ அறிக்கை
நானுஓயா பொலிஸ் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பி.எஸ். சஞ்சீவனி (2435) மற்றும் அவரது பொலிஸ் அதிகாரிகள், நானுஓயா பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், இதன்போதே முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த 06 மாணவிகள் தடயவியல் மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri