யாழில் கஞ்சா வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைது
யாழ். (Jaffna) வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப் படையினரும், மருதங்கேணிப் பொலிஸாரும் இணைந்து இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்டவர் வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடம் இருந்து 5 கிலோ 660 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
