யாழில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கசிப்பு போதைபொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றையதினம் (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
கசிப்பு மீட்பு
அராலித்துறை பகுதியில் நீண்ட நாட்களாக குறித்த நபர் கசிப்பினை விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

இந்நிலையில், சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து ஏழு லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட கசிப்புடன் சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிஸார் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan