அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடுவதாக நேற்று(13) சம்மாந்துறை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இரு சந்தேக நபர்கள் சோதனை செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்த கையடக்க தொலைபேசியின் உட்பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணை
இச்சோதனை நடவடிக்கையில் கைதான சந்தேக நபர்கள் சம்மாந்துறை புளக் ஜே 02 பகுதியைச் சேர்ந்த 28 வயது மற்றும் கல்லரிச்சல் 03 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர்களாவர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 2 கிராம் 631 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் உட்பட கையடக்க தொலைபேசி பணம் என்பன மீட்கப்பட்டதுடன் மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 330 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டன.
மேலும், சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 47 நிமிடங்கள் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
