பல்கலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கேரள கஞ்சா விற்பனை செய்த 26 வயதுடைய
இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகள் முடிந்து செல்லும் வழியில் சந்தேகநபர் சில காலமாகக் கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபரிடமிருந்து கேரள கஞ்சா பொட்டலங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
உண்டியலை உடைத்து திருடியவர் கைது
இதேபோல் யாழில் சுதுமலையில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுதுமலையிலுள்ள ஆலயத்தின் உண்டியல் நேற்றுமுன்தினம் (29.07.2023) உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது.
ஆலய நிர்வாகத்தினர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தில் நேற்றுக் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
