கிளிநொச்சியில் தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது
கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஊழியரை மறித்து தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட குறித்த சந்தேகநபர், வாக்காளர் அட்டைகளையும் பறிக்க முற்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது
இந்நிலையில், வாக்காளர் அட்டைகளை தீ மூட்டுவேன் எனவும், குறித்த ஊழியரை அச்சுறுத்தும் வகையிலும் அச்சந்தேகநபர் முயன்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி தபாலதிபருக்கு தகவல் வழங்கியதுடன், பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
