கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் யாழில் கைது
யாழில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றுக்குள் புகுந்த குறித்த நபர் கூரிய ஆயுதங்களால் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்திய போது அவர் ஏற்கனவே வாகனம் நகைக்கொள்ளை மற்றும் கொலை முயற்சி போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
அவரிடம் மேலதிக விசாரணைகளை யாழ்.மாவட்ட பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
