இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஆற்றுப்பகுதிகளில் மண் அகழ்ந்தவர் கைது
இரணைமடு குளத்திற்கு கீழ் உள்ள ஆற்றுப்பகுதியில் இன்று மணல் அகழ்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடமிருந்து உழவு இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்தின் கீழ் பகுதிகளில் மண் அகழ்வு இடம் பெறுவது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் இரணைமடு குளத்தின் பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் பொலிசாரின் துணையுடன் குறித்த பகுதிகளுக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்ந்து கொண்டிருந்த உழவு இயந்திரம் மடக்கிபிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.