வவுனியாவில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது
வவுனியா (Vavuniya) - ஈச்சங்குளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவர் கடந்த 19ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
ஈச்சங்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சுற்றிவளைப்பில் சந்தேக நபர் வவுனியா - சுந்தரபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கைது செய்யப்பட்டவர் வவுனியா சுந்தரபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam