அநுரவிற்கு சவாலாகும் அமெரிக்க இராணுவ தரையிறக்கம் தொடர்பான ஒப்பந்தம்
இலங்கை, அமெரிக்காவுடன் (US) மேற்கொண்டு நிலுவையில் உள்ள சோஃபா (Status of forces agreement ) ஒப்பந்தத்தினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayaka) அரசிற்கு சிக்கல் நிலைய ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "மைக் போம்பியோ, அமெரிக்காவினுடைய வெளியுறவு துறை செயலாளராக இருந்த போது, அதாவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தின்போது போம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்து சோஃபா ஒப்பந்தத்தை மெற்கொள்வதற்கு முயற்சி செய்தார்.
இருப்பினும், அதற்கு கோட்டாபய ராஜபக்ச ஒப்பு கொள்ளாத நிலையிலேயே அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. குறித்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர்களில் விஜித் ஹேரத்தும் ஒருவர்.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் சோஃபா ஒப்பந்தம் செய்யப்பட்டு மைத்திரி ஆட்சி காலத்தில் அதற்கு நீடிப்பு வழங்கப்பட்டதுடன் தற்போது அந்த ஒப்பந்தத்தின் படி எந்தவித அறிவிப்பும் இன்றி அமெரிக்கா அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |