தொடருந்து பாதையில் பேருந்தை செலுத்தியவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
அவிசாவளை (Avissawella) - புவக்பிட்டிய பகுதியில் போக்குவரத்திற்கு தடை ஏற்படும் வகையில் தொடருந்து பாதையில் பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதிக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தனியார் பேருந்து சாரதியை எதிர்வரும் ஜுலை 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் மூலம் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்கள்
இதன்போது, தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய தனியார் பேருந்து சாரதி அங்கிருந்து வெளியேற முடியாமல் பேருந்து செலுத்துவதில் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை மற்றைய வாகன சாரதிகள் காணொளியாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமையவே, குறித்த பேருந்து சாரதி கைது செய்யப்பட்டு பேருந்தும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri