அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களை திருடிய நபர் ஒருவர் கைது
திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து பணம் மற்றும் இலத்திரனியல் பொருட்களைத் திருடிய நபர் ஒருவரை இன்று(13) கைது செய்துள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
ரகுமானிய்யா நகர், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில், வீட்டு உரிமையாளர்கள் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி வீட்டுக்குள் புகுந்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களைத் திருடியுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரைத் தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri