ஹெரோயின் போதைப்பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கிள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போதே அவரிடமிருந்து 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை - மட்கோ, மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த ஏ.துலாஜ் மதுசங்க (30 வயது) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
