மூதாட்டி ஒருவரை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திய நபருக்கு15 வருட கடூழிய சிறைத்தண்டனை
69 வயதான மூதாட்டி ஒருவரை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின், இரண்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஒவ்வொரு குற்றச்சாட்டின் கீழும், அவருக்கு ஏழு மற்றும் 15 வருட கடூழிய சிறைத்தண்டனையை காலி மேல் நீதிமன்ற நீதிபதி காவிந்த்யா நாணயக்கார வழங்கியுள்ளார்.
அபராதம்
அத்துடன், 15 ஆண்டுகளும், ஒரே நேரத்தில் இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறைத்தண்டனையை வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சிறைத்தண்டனை தவிர, குற்றவாளி, அபராதமாக 20000 ரூபாயையும், பாதிக்கப்பட்டவருக்கு 50,000 ருபாயையும் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த அபாரதங்களை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனையும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |