தமிழீழ விடுதலைப்புலிகளின் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தை தோண்ட அனுமதி
முல்லைத்தீவு - கிளிநொச்சி எல்லைப்பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தங்கங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடமொன்றினை அகழ்வு செய்வதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தர்மபுரம் பொலிஸார் நீதிமன்றில் மேற்கொண்ட வழக்கிற்கு அமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி மாலை 2.30 மணியளவில் அந்த பகுதியினை அகழ்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த பகுதியான றெட்பான சந்திக்கு அருகில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவின் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நீதிமன்றின் உத்தரவு
இதற்கமைய, பல தடவைகள் சட்டவிரோதமாக தோண்டும் முயற்சிகள் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது வெற்றியளிக்காத நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் தோண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே நீதிமன்றம் இதற்கான உத்தரவினை கடந்த வெள்ளிக்கிழமை (16.02.2024) அன்று வழங்கியுள்ளது.
எனவே, எதிர்வரும் 19ஆம் திகதி அன்று நீதிபதி முன்னிலையில் பொலிஸார், பிரதேச தலைவர்கள், கிராம சேவையாளர்கள், பிரதேச சபையினர், தொல்பொருள் திணைக்களத்தினர், உள்ளிட்ட அரச திணைக்களங்களின் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
