தனியார் வங்கிகள் தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனம்
தனியார் வழங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி அரச நிறுவனங்களின் கணக்குகளை அவசர காலங்களில் கையாள்வதற்காக திறந்து பராமரிக்க தனியார் வங்கிகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்
விசேட அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தற்போது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் துறைகள் உட்பட அனைத்து நிறுவனங்களின் கணக்குகளும் அரசு வங்கிகளில் பராமரிக்கப்படுகின்றன.
அரச சேவைகள்
அரச வங்கி ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளினால் அரச சேவைகள் பாரிய பிரச்சினையாக மாறுவதை தடுக்க முடியாது என அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் இனிமேல் அரச நிறுவனங்களின் கணக்குகளை தனியார் வங்கிகள் திறந்து பராமரிக்க வேண்டும் எனவும், இதனால் அவசர காலங்களில் அவற்றை கையாள முடியும் எனவும் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிதி அமைச்சின் முன் அனுமதியுடன் இந்த விடயத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியதாக அந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.