தவறான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட அனுமதி : சஜித் குற்றச்சாட்டு
சஹஸ்தனவி இயற்கை திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையத்துக்கான அமைச்சரவை அனுமதி தவறான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், ஒரு அலகு மின்சாரத்தின் விலை ரூ.20.15 ஆகும்.
ஒரு லீட்டர் டீசலின் விலை ரூ.110 ஆகவும், ரூபாவின் மாற்று விகிதம் ரூ.195 ஆகவும் இருப்பதை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை
இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், ஒரு லீட்டர் டீசலின் விலை ரூ. 286 ஆகவும், ஒரு டொலரின் பெறுமதி ரூ. 300 ஆகவும் இருந்தது.
தவறான தரவுகளின் அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து, சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்துக்கு அனுமதியைப் பெற்று, நாட்டிற்கும் நுகர்வோருக்கும் பெரும் அடியை அரசாங்கம் கொடுத்துள்ளது.
இது மிகவும் ஊழல் நிறைந்த செயல்முறையாகும். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தவறுகளை சுட்டிக்காட்டிய போதும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த திட்டத்திற்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 5 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
