கோவிட் தொற்றில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பிரதமர் அனுமதி
கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடம் வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நீரில் கோவிட் வைரஸ் பரவுமா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார கேள்வி எழுப்பிய போது, நீரில் கொரோனா பரவாதென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அந்த பதிலுக்கமைய கோவிட் தொற்றினால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுமா என எஸ்.எம்.மரிக்கார் மீண்டும் கேட்ட போது, அதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam