மீண்டும் வழங்கப்படவுள்ள அரிசி இறக்குமதிக்கான அனுமதி
இடைநிறுத்தப்பட்டிருந்த அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்று முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக கடந்த 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் தனியார் துறை வர்த்தகர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அக்காலப் பகுதியில் மொத்தமாக 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
அரிசிப் பற்றாக்குறை
எனினும் நாட்டில் நிலவும் அரிசிப் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி போதுமானதாக இல்லாது காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது குறித்து அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததுடன், அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதன் பிரகாரம் இன்று முதல் அரிசி இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
