கோவிட்டிற்கு மத்தியில் மதுபான உற்பத்தியாளர்களுக்கு அனுமதி
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளுக்கு மத்தியில் மதுபான உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிதி அமைச்சரின் கையொப்பத்தில் இவ்வாறு புதிதாக மதுபான உற்பத்திக்கான அனுமதி பத்திரங்கள் சில வழங்கப்படுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சில வர்த்தகர்களுக்கும் எதனோல் உற்பத்திசாலை அனுமதித்திரங்களும் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் தற்போது சுமார் 24 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மதுபான உற்பத்தியில் ஈடுபடும் 24 நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களே அரசாங்கத்திற்கு செலுத்தும் வரியில் 95 வீதமான வரியை செலுத்தகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வரிகளை கிரமமாக செலுத்தாது, தரமான உற்பத்தியில் ஈடுபடாத நிலைமை நீடித்து வரும் பின்னணியில் புதிதாக உற்பத்திக்கு அனுமதி வழங்குவது உசிதமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.