இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய இலங்கைப் படகுகளுக்கு அனுமதி

Fishing Sri Lanka India
By Rakesh Oct 27, 2026 01:30 PM GMT
Report

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அர்னாப்' புயலினால் ஏற்பட்டுள்ள அபாயகரமான காலநிலைச் சூழலில், இந்தியக் கடற்பரப்பில் பாதுகாப்பாகத் தஞ்சமடைவதற்குச் சுமார் 25 இலங்கை பலநாள் கடற்றொழில் படகுகளுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்றொழில் அமைச்சு, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்திய அரசிடம் விடுத்த விசேட இராஜதந்திரக் கோரிக்கைக்கு அமையவே இந்த அவசர அனுமதி பெறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘அர்னாப்’ புயல் நாளை(27.10.2026) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதியினூடாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொழில் நடவடிக்கை

இதனால், வட அகலாங்கு 10ஏ - 20ஏ மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80ஏ - 95ஏ இற்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரை மிகக் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய இலங்கைப் படகுகளுக்கு அனுமதி | Permission 25 Sl Boats To Take Refuge In Indian

அத்துடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால், அந்தக் கடற்பகுதிகளுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் சமூகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சுமார் 25 இலங்கை பலநாள் கடற்றொழில் படகுகள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உடனடி நடவடிக்கை

தீவிரமடைந்துள்ள புயல் காரணமாக, இந்தப் படகுகள் மீண்டும் இலங்கையை நோக்கிப் பாதுகாப்பாகப் பயணிப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டன.

இந்தியக் கடற்பரப்பில் தஞ்சமடைய இலங்கைப் படகுகளுக்கு அனுமதி | Permission 25 Sl Boats To Take Refuge In Indian

இதனைக் கருத்தில்கொண்டு, கடற்றொழிலாளர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இதன்படி, ஆபத்தான வானிலை மண்டலத்திலிருந்து தப்பித்துத் தற்காலிகமாகப் பாதுகாப்பைப் பெறுவதற்காக, அப்படகுகள் இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

நாட்டுக்கு வாருங்கள் என்ற அநுர அமைச்சர்! நம்பி வந்த ஈழத்தமிழர் விமான நிலையத்தில் மாயம் - வெடித்தது சர்ச்சை

நாட்டுக்கு வாருங்கள் என்ற அநுர அமைச்சர்! நம்பி வந்த ஈழத்தமிழர் விமான நிலையத்தில் மாயம் - வெடித்தது சர்ச்சை

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US