யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ். (Jaffna) மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் நேற்றைய தினம் (02.06.2024) மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறுபட்ட சந்திப்புக்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, நல்லை ஆதீனத்திற்கு சென்று ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றுள்ளார்.
விசேட கலந்துரையாடல்கள்
அதேவேளை, நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும், யாழ். பொதுசன நூலகத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் அங்குள்ள அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி, அவர், இந்தியா (India) - இலங்கைக்கு (Sri Lanka) இடையேயான பாக்கு நீரிணையை கடந்த சிறுவன் தன்வந்தினையும் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri