கிழக்கு ஆளுநரினால் உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு

Ampara Senthil Thondaman Eastern Province
By Farook Sihan Jul 19, 2024 01:21 AM GMT
Report

அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்த மற்றும் தினசரி அடிப்படையில் சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் நிகழ்வு ஆளுநர் செந்தில் தொண்டமானின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று முன்தினம் (17) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

இதில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, அம்பாறை, நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, இறக்காமம், மஹாஓயா, நாமல்ஓயா, தமண, லஹுகல, தெஹியத்தகண்டி, பதியத்தலாவ, உஹன, போன்ற பிரதேச சபை, மாநகர சபை போன்றவற்றில் கடமையாற்றிய 419 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

கிழக்கு ஆளுநரினால் உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு | Permanent Appointment Local Council Employees

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தமது நிரந்தர நியமனங்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

கிழக்கு ஆளுநரினால் உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு | Permanent Appointment Local Council Employees

அவர்களால் எவ்வித வெற்றிகரமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர நியமனம் குறித்தும், நிரந்தர நியமனம் இல்லாததால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

கிழக்கு ஆளுநரினால் உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு | Permanent Appointment Local Council Employees

ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வினைப் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார். ஆளுநர் செந்தில் தொண்டமானால் உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு 1350க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில் நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதில் முதல் கட்டமாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.ஒன்பது மாகாணத்திலும் உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து பிரச்சினைகள் இருந்த போதும் கிழக்கு மாகாண ஆளுநர் இதுக்குறித்து அதிகம் கவனம் செலுத்தி ஒரே நாளில் இந்நியமனங்களை வழங்கி வைத்தமை என்பது பாராட்டுகிரியது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு ஆளுநரினால் உள்ளூராட்சிமன்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு | Permanent Appointment Local Council Employees

மேலும், வருடமாக காணப்பட்ட தங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஒரு வருடக் காலத்திற்குள் பெற்றுத்தந்த ஆளுநருக்கு உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா, திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் ஆணையாளர் முதலமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன்,

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எஸ்.எம். பி. ரத்நாயக்க, முன்னாள் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் ஏ.மன்சூர், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம் முஷாரப் அவர்களின் சம்மாந்துறை தொகுதி இணைப்பாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல், கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோயில், ஆலையடிவேம்பு, அம்பாறை, நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, இறக்காமம், மஹாஓயா, நாமல்ஓயா, தமண, லஹுகல, தெஹியத்தகண்டி, பதியத்தலாவ, உஹன, போன்ற பிரதேச சபை, மாநகர சபை ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

கொழும்பு புறநகர் பகுதியில் ஏழு பெண்கள் கைது

கொழும்பு புறநகர் பகுதியில் ஏழு பெண்கள் கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 






நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US