பயிற்றுவிக்கப்பட்ட பயிலுநா்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
வேலையற்ற பட்டதாரிகள்/ டிப்ளோமாதாரர்களை தொழிலில் நிலைப்படுத்தும் வேலைத்திட்டம் (2020) இன் கீழ் சோ்த்துக் கொள்ளப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட பயிலுநா்களுக்காக நிரந்தர நியமனம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய கல்வியற் கல்லூரிகள், ஆசிரியா் கல்லூரிகளில், ஆசிரிய மத்திய நிலையங்களில் மற்றும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெற்று, 2022 ஜனவரி மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் நிரந்தர நியமனம் பெற்ற, கல்வி அமைச்சின் கீழ் நிலைப்படுத்தப்பட்ட பட்டதாரிகள் / டிப்ளோமாதாரார்கள், தமது நிரந்தர நியமனக் கடிதத்தை பெற்றுக் கொள்வதற்காக கீழ் குறிப்பிடப்பட்ட தினங்களில் பத்தரமுல்ல, “இசுருபாய” வளாகத்தில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாங்கள் வருகை தரும்போது தேசிய அடையாள அட்டை மற்றும் 2021 டிசம்பா் 31 ஆம் திகதி வரை பயிற்சி பெற்றுக் கொண்டிருந்ததாக உறுதிப்படுத்துவதற்காக தாபனப் பொறுப்பாளாரின் கடித்துடன் வருகை தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகள் பயிற்சி பெற்ற மாவட்டங்களின் அடிப்படையில் வருகைதர வேண்டிய தினங்கள் பின்வருமாறு,
கொழும்பு, மாத்தறை - 2022 ஜனவரி 11
ஹம்பாந்தோட்டை, கேகாலை, பதுளை இரத்தினபுரி, மாத்தளை - 2022 ஜனவரி 12
கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை - 2022 ஜனவரி 13
வவுனியா, மன்னார், கம்பஹா, காலி - 2022 ஜனவரி 18
அம்பாறை, மொணராகல, புத்தளம், களுத்துறை - 2022 ஜனவரி 19
குருநாகல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா,
முல்லைத்தீவு - 2022 ஜனவரி 20
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam