ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர நியமனம்! வெளியான முக்கிய அறிவிப்பு
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய உள்ளூராட்சி நிறுவனங்களில், தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கே குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்மூலம் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் பணியாற்றும் 8,435 பேர் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர்.
விசேட கலந்துரையாடல்
இது குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நியமனக் கடிதங்களை விரைவாக வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
அதன்படி, அந்த நியமனக் கடிதங்கள் அனைவருக்கும் ஜூலை மாதத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.