தம்மை இடைநீக்கம் செய்ய உயர் நீதிமன்றத்தாலேயே முடியும்! கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ரூஹுல் ஹக்
தாம் பிரதம நீதித்துறை மருத்துவ அதிகாரியாக பதவியேற்று தமது கடமையை சரியாகச் செய்வதைத் தடுக்கும் ஒரு தீங்கான முயற்சி நடந்து வருவதாக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தினால் மட்டுமே தமது கடமைகளை இடைநிறுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களில் தமக்கு எதிராக அண்மையில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில், நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வரும் பல மருத்துவ சட்ட வழக்குகளுக்கு, தாம் அரச சாட்சியாக செயல்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக அறுவை சிகிச்சை
மூன்று வயது சிறுவன் ஹம்டி ஃபஸ்லீனுக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக அறுவை சிகிச்சை துரதிர்ஸ்டவசமாக தோல்வியடைந்தது.
இந்தநிலையில் இறந்த சிறுவனின் ஒற்றை சிறுநீரகத்துடனேயே பிறந்துள்ளார் என்பதையும், இதன்காரணமாக அவருடைய ஒற்றை சிறுநீரகம் அகற்றப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார் என்பதையும், மரணத்துக்கான காரண அறிக்கையின் தீர்ப்பில் தாம் தெளிவாக கூறியுள்ளதாக ரூஹுல் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவ அதிகாரியை விசாரணை செய்வதற்குப் பதிலாக, மரணத்திற்கான தமது காரண அறிக்கையில் ஊடகங்கள் தவறுகளைக் கண்டறிந்துள்ளன என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மருத்துவ சபை, தமது பதிவு எண்ணை 2022 டிசம்பர் 20 ஆம் திகதி முதல் எட்டு மாதங்களுக்கு இடைநிறுத்தியதால், தமது கடமைகளைத் தொடர்வதற்கான உரிமையை விளக்கி சுகாதார அமைச்சிடம் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதில் இல்லை
இந்த முறையீட்டிற்கு சுகாதாரத்துறை மற்றும் அமைச்சர் இருவரிடமிருந்தும் எந்த பதிலும் வராததால், தமது கடமைகளை தவறாமல் நடைமுறைப்படுத்தவும் செய்யவும் தனக்கு முழு உரிமை உள்ளது.
எனவே தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், நாட்டின் தலைமை சட்ட வைத்திய அதிகாரியாக தம்மை நியமிக்க விடாமல் தடுக்கவும், தீங்கான செயற்பாடு நடந்து கொண்டிருப்பதாகவும் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் தெரிவித்துள்ளார்.
தமது 23 வருட சேவையில் தமது சொந்த கடமைகள், இலங்கையை விட்டு வெளியேறிய 12 மருத்துவர்களின் மருத்துவ சட்டப் பணிகளின் குவியல்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எனவே, யாரேனும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து தம்மை இடைநீக்கம் செய்ய வேண்டுமானால், அது உயர் நீதிமன்றமே பொருத்தமான நீதிமன்றமாக இருக்கும் என்றும் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
