பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்
பேரறிவாளனுக்கு (A. G. Perarivalan) மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி (Rajiv Gandhi) கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த 5 மாதங்களாக பரோலில் வெளியில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தனக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி பேரறிவாளனுக்கு பரோலில் விடுப்பு வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்தே பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பரோல் காலமானது இன்றுடன் முடிவடைகிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri