பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மகாவலி ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளான மாணவரே இன்று (04.03.2024) உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 23ஆம் திகதி நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், மகாவலி கங்கையின் கல்பொத்தவல என்ற இடத்தில் அவர் நீராடச் சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது மாணவன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் மாணவனை கரைக்கு கொண்டு வந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ மாணவரான இசுரு மதுஷான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam