பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் பெண்ணின் மரணம்! எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தினை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,சமோதி சந்தீபனி எனும் குறித்த யுவதிக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்ட நாளில் மேலும் 12 பேருக்கு அதே ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரின் தகவல்
ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 2715 பேருக்கு இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ஊசி மருந்தானது 2013 ஆம் ஆண்டு முதல் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்த 05 விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை ஓரிரு வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




