“சிறையில் இருக்கவில்லை என்றால் நானும் வந்திருப்பேன் தம்பி” போராட்டம் தொடர்பில் ரஞ்சன் இட்டுள்ள பதிவு
சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மக்களின் இன்றைய போராட்டம் சம்பந்தமாக தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
சிறையில் இருக்கவில்லை என்றால் தானும் மக்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டிருப்பேன் என ரஞ்சன் கூறியுள்ளார்.

“சிறையில் இருக்கவில்லை என்றால் கட்டாயம் நானும் போராட்டத்திற்கு வந்திருப்பேன் தம்பி. மிகவும் துயரம். நான் போராட்டத்திற்கு வருவேன் என்று அறிந்துக்கொண்டதன் காரணமாக இவர்கள் என்னை முதலில் சிறையில் அடைத்தனர்” என ரஞ்சன் முகநூலில் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் மற்றுமொரு பதிவை இட்டுள்ள ரஞ்சன், “தம்பிமாரே இந்த பலத்துடன் என்னையும் விடுதலை செய்ய வெலிகடை சிறைச்சாலைக்கு வாருங்கள். இவர்கள் என்னை விடுதலை செய்ய மாட்டார்கள்.

இவர்கள் அனைவரும் திருடர்கள். இவர்கள் அனைவரும் நண்பர்கள் என நான் கூறியதால், என்னை நான்கு ஆண்டுகளுக்கு சிறையில் அடைத்துள்ளனர். நான் தற்போது ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளேன். நான் உங்களது போராட்டத்தின் ஒரு பங்காளி” என கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri