உணவின்றி மக்கள் அவதி! - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளவில்லையென குற்றச்சாட்டு
வவுனியாவில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கையில் பணமின்றி பொருட்களை வாங்க முடியாது அவதிப்படும் நிலை உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நீண்ட நாட்களாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையால் நாளாந்த கூலித்தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் வருமானம் பெறுபவர்கள் உணவுப்பொருட்களைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தவிர வேறு எவரும் தமது நிலை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
வவுனியாவில் ஈஸ்வரிபுரம், சுந்தரபுரம் உட்பட்ட குடியேற்றத் திட்டக் கிராமங்களில் வசிப்பவர்கள் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையில் காணப்படுகின்றனர்.
வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனை தவிர மற்றைய எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களுக்கு உதவ முன்வரவில்லை.
கடந்த முறை ஊரடங்கு அறிவித்திருந்த போது நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாக
வைத்து தமக்கு உதவிய அரசியல்வாதிகள் இம்முறை தம்மைக் கண்டு கொள்ளாமை கவலை
அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.