விடுதலைப் புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு பணம் செலுத்தும் இலங்கையர்கள் : கெமுனு விஜயரட்ண
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் ஐ.எஸ் அமைப்புமே தற்போது அதிகளவு நிதியை பெறும் பயங்கரவாத அமைப்புகள் என இலங்கை தனியார் போக்குவரத்து சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஐம்பது வீதமான மக்கள் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு நாளாந்தம் ஒரு ரூபாவாவது செலுத்துகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பும் ஐ.எஸ் அமைப்புமே தற்போது அதிகளவு நிதியை பெறும் பயங்கரவாத அமைப்புகள். நான் மேற்கொண்ட ஆய்வின் போது இது தெரியவந்தது.
புலிகளின் நிதியை நம்பி இயங்கும் நிறுவனங்கள்
அனேக நிதி நிறுவனங்கள் விடுதலைப் புலிகளின் நிதியிலேயே இயங்குகின்றன. அவர்கள் தாங்கள் சேகரித்த பணத்தை உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு வழங்குகின்றனர். அரசாங்க ஊழியர்களும் தொழிற்சங்கங்களும் அவர்களை நம்பியே உள்ளனர்.
பொலிஸாரின் விசாரணைகளை விடுதலைப்புலிகளும் ஐ.எஸ் அமைப்பினரும் குழப்புவதால் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாகவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கும் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்திற்கும் எதிர்ப்பு உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |