நிகழ்நிலை மோசடிக்கு ஆளாகும் மக்கள்: மத்திய வங்கி ஆளுநர் கவலை
மக்களிடையே நிதி கல்வியறிவு போதுமானதாக இல்லாததன் காரணமாக, அவர்கள் நிகழ்நிலை மோசடிக்கு ஆளாகும் நிலைமை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பு பிரசாரத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி நிறுவனங்கள்
அத்துடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் புதிய தொழில்நுட்ப சேவைகள் குறித்து பொதுமக்களை விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
நிதி கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளின் போது தாள்கள், நாணயத்தினை எடுத்துச் செல்வதை விட டிஜிட்டல் முறைமையினை பயன்படுத்துவது இலகுவானதாகும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |